Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 17 ஜூலை (ஹி.ச.)
செங்கல்பட்டு அரசினர் சிறார் சிறப்பு இல்லத்தில்
நேற்று இரவு சுமார் 10 மணியளவில் சிறப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறார்களுக்குள் ஏற்பட்ட தகராறு முற்றி மோதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை, 10-க்கும் மேற்பட்ட சக சிறுவர்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட அதிகாரிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் அவரது தலையில் 22 தையல்கள் போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர போலீசார், சிறப்பு இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சிறுவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறார் சிறப்பு இல்லத்திலேயே இத்தகைய வன்முறை சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறார்களிடையே ஏற்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN