Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச)
சென்னையில், திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து இளம்பெண்ணை ஏமாற்றி பணம் பெற்றதுடன், பின்னர் சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படும் புகாரில் காவலர் கார்த்திகேயன் என்பவரை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
புகாரின்படி, கல்லூரி காலம் முதல் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த கார்த்திகேயன், 2023-ஆம் ஆண்டு சென்னையில் இளம்பெண்ணுடன் ஒன்றாக தங்கி வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் அவரிடம் பல்வேறு தேவைகளுக்காக சுமார் ரூ.8 லட்சம் வரை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருவரும் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த நிலையில், பின்னர் சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய கார்த்திகேயன் மறுத்ததாக இளம்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காவலர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ