திருவள்ளூர் அருகே கனரா வங்கியில் தீ விபத்து - முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்
திருவள்ளூர், 17 ஜூலை (ஹி.ச) திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கிக் வங்கிக்குள் இருந்து இன்று அதிகாலை புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், கா
Fire at Canara Bank near Tiruvallur


திருவள்ளூர், 17 ஜூலை (ஹி.ச)

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கிக் வங்கிக்குள் இருந்து இன்று அதிகாலை புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த முக்கிய ஆவணங்கள், கோப்புகள் மற்றும் இருக்கைகள், மின்சாதனப் பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்வாய்ப்பாக அதிகாலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பூவிருந்தவல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவல் காட்டுத் தீயாய் பரவியதும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள், வங்கியில் நகைகளை அடமானம் வைத்தவர்களும், லாக்கரில் நகை வைத்தவர்களும், பணத்தை டெபாசிட் செய்திருப்பவர்கள் என பலரும் வங்கி முன் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / vidya.b