Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 ஜூலை (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் போது, ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் (Jind) ரயில் நிலையத்தில் இருந்து ஜிந்த்–சோனிபட் இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சேவையை காலை 11 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, ஜிந்தில் உள்ள ஏகலவ்யா மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் சுமார் ரூ.14,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பின்னர் சண்டிகரில் சுகாதாரம், கல்வி மற்றும் சாலை உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், அதன் பிறகு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு அம்ருத் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 20 மாநிலங்களில் அமைந்துள்ள 75 ரயில் நிலையங்களை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மைய விழா ஜலந்தர் கான்டோன்மென்ட் (Jalandhar Cantt.) ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பசுமை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ரயில் போக்குவரத்துக்கு இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்குவதோடு, ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சியும் மேலும் வலுப்பெறுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P