Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
சென்னை பெரம்பூர் பகுதியில் இட்லி மாவு கடை நடத்தி வந்தவர் ஜெயராமன்
(வயது 67) வழக்கம் போல் இன்று காலை தனது கடையில் மாவு அரைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மாவு அரைப்பதற்காக கிரைண்டரின் மின் இணைப்பை இயக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
மின் கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது கிரைண்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த ஜெயராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஈரப்பதம் அதிகம் உள்ள மாவு அரைக்கும் இடங்களிலோ மின்சாதனப் பொருட்களைக் கையாளும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மின்வாரியம் கூறியுள்ளது.
மேலும் ஈரக்கைகளுடன் ஸ்விட்சுகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.கடைகள் மற்றும் வீடுகளில் தகுந்த எர்த் (Earth Connection) வசதி மற்றும் இ.சி.பி.டி (ELCB/RCCB) எனப்படும் மின் கசிவு தடுப்புக் கருவிகளைப் பொருத்துவது இத்தகைய விபத்துகளைத் தடுக்கும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b