மேஜர் லீக் கிரிக்கெட் - வாஷிங்டன் 238 ரன்கள் குவிப்பு
வாஷிங்டன் , 17 ஜூலை (ஹி.ச.) 4-வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. அதன்படி, குவாலிபையர்-2 ஆட்டத்தில் சான்
A


வாஷிங்டன் , 17 ஜூலை (ஹி.ச.)

4-வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

6 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன.

அதன்படி, குவாலிபையர்-2 ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியும், வாஷிங்டன் பிரீடம் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய வாஷிங்டன் பிரீடம் அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அந்த அணியின் தொடக்க வீரர் ஆண்ட்ரிஸ் குஸ் சிறப்பாக விளையாடி 73 ரன்கள் குவித்தார்.

அவருக்கு மற்ற வீரர்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்ததால், வாஷிங்டன் பிரீடம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

இதையடுத்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி தனது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA