Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்தும், இந்து சமய அறநிலையத்துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக திமுகவைச் சேர்ந்த வினோத் சூர்யகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கைது செய்யப்பட்ட வினோத் சூர்யகுமாரின் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சமூக நலன் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து, கழகத்தின் கொள்கை வழியில் செயல்பட்டதற்காக ஒரு இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வினோத் சூர்யகுமாரின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருப்பதாக விமர்சித்துள்ள கனிமொழி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திமுக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும், சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என தனது பதிவில் உறுதியளித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ