கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு - அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கு வாபஸ்
கரூர், 17 ஜூலை (ஹி.ச.) கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு, மனுதாரர் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் என். பிர
சென்னை உயர்நீதிமன்றம்


கரூர், 17 ஜூலை (ஹி.ச.)

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு, மனுதாரர் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் என். பிரபாகரன் தாக்கல் செய்திருந்த மனுவில், கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன உத்தரவுகளை வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் தனது பொதுநல வழக்கை திரும்பப் பெற்றதால், வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam