புதிய கள்ளுக்கடை திறக்க எதிர்ப்பு - முதல்-மந்திரிக்கு 5-ம் வகுப்பு மாணவி கடிதம்
எர்ணாகுளம் , 17 ஜூலை (ஹி.ச.) எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுப்புழா அருகே உள்ள மாரடி பகுதியில் புதிய கள்ளுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாரடி ஊராட்சிக்கு உட்பட்ட அவராச்சன் குடியிருப்பு பகுதியில் புதிய கள்ள
A


எர்ணாகுளம் , 17 ஜூலை (ஹி.ச.)

எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுப்புழா அருகே உள்ள மாரடி பகுதியில் புதிய கள்ளுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாரடி ஊராட்சிக்கு உட்பட்ட அவராச்சன் குடியிருப்பு பகுதியில் புதிய கள்ளுக்கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி முடிந்த பிறகு மாலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விளையாடும் பகுதியில் இந்த கடை அமைக்கப்பட உள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி இவாணியா (வயது 10), கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், ‘‘மாணவர்கள் விளையாடும் பகுதியில் கள்ளுக்கடை அமைக்கக்கூடாது. இதனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படும்.

போராட்டத்தின்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறை பார்த்து நாங்கள் பயந்துபோனோம்.

எனவே, இந்த பகுதியில் கள்ளுக்கடை அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் மாணவி தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA