கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் கசிவு குறித்து பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 17 ஜூலை (ஹி.ச.) கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ரகசிய வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுத
மாணிக்கம்


தமிழ்நாடு, 17 ஜூலை (ஹி.ச.)

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ரகசிய வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தரவு மையத்தில் சேமிக்கப்பட்டிருந்த ஆவணங்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான கவலையை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான தேசியத் தகவல்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் போது பாதுகாப்பு பலவீனமடைவதை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் உடனடியாக தலையிட்டு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) ஆகியோர் இந்த விவகாரத்தில் உரிய பொறுப்பேற்று துரித விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேசியப் பாதுகாப்பில் எந்த சமரசமும் ஏற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P