Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச)
சென்னையில் உள்ள மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளில் ஒன்றான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மருத்துவமனையின் ஒட்டுமொத்த பராமரிப்பு பணிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை வசதிகள், மருந்துகள் இருப்பு மற்றும் தூய்மை வசதிகள் குறித்து அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறிப்பாக உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் கழிப்பறை வசதிகளின் தூய்மை நிலை குறித்து அவர் விரிவாக கேட்டறிந்தார்.
மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்றும், தூய்மையை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் நோயாளிகளிடம் குறைகள் குறித்தும் நேரில் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மருத்துவமனை முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b