நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
தமிழ்நாடு, 17 ஜூலை (ஹி.ச.) நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET-UG) தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட
நயினார்


தமிழ்நாடு, 17 ஜூலை (ஹி.ச.)

நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET-UG) தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சென்னையைச் சேர்ந்த வெங்கடாபதி வேலாயுதம் இந்திய அளவில் 12-வது இடம் பெற்றிருப்பதும், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 12 மாணவர்கள் சிறப்பிடங்களைப் பெற்றிருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வரும் வெறுப்புப் பிரச்சாரங்களை மாணவர்கள் தங்களது கடின உழைப்பால் முறியடித்துள்ளதாக கூறியுள்ள நயினார் நாகேந்திரன், மருத்துவக் கனவை நோக்கி முன்னேறும் அனைத்து மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், இந்த முறை வெற்றி பெற முடியாத மாணவர்கள் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் தயாராகி, அடுத்த முயற்சியில் உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P