Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஷ்வர் , 17 ஜூலை (ஹி.ச.)
ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலின் ரத யாத்திரை நேற்று கோலாகலமாக தொடங்கியது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பிரசித்தி பெற்ற திருவிழா 9 நாட்கள் நடைபெற்று, வரும் 24-ந் தேதி நிறைவடைகிறது.
இதையொட்டி நடைபெற்ற ரத யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் ஜெகநாதர், பாலபத்ரர், சுபத்ரா ஆகியோரின் தேர்கள் வீதிகளில் வலம் வந்தன.
இந்த நிலையில், ரத யாத்திரையின்போது 2 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு காரணமாக 60 வயதுடைய பக்தர் ஒருவரும், 35 வயதுடைய மற்றொரு பக்தரும் உயிரிழந்ததாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ரத யாத்திரையின்போது எந்தவிதமான கூட்ட நெரிசலும் ஏற்படவில்லை என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA