'வந்தே மாதரம்' அவமதிப்புக்கு தண்டனை - நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்
புதுடெல்லி, 17 ஜூலை (ஹி.ச.) ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், ''தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026'' (Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026) என்ற புதிய மசோதாவை மக்களவையில்
PARLIAMENT-WOMEN-RESERVATION-BILL-DEBATE


புதுடெல்லி, 17 ஜூலை (ஹி.ச.)

ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026' (Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026) என்ற புதிய மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதா, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு அரசின் சட்டப்பணிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம், தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பது அல்லது அதன் பாடலைப் பாடுவதற்கு இடையூறு செய்வது ஆகியவற்றை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பதாகும்.

இதற்காக, தற்போது நடைமுறையில் உள்ள 1971-ஆம் ஆண்டின் தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.

தற்போது தேசியக் கொடி, தேசிய கீதம் (ஜன கண மன) மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேசியப் பாடலான 'வந்தே மாதரத்திற்கும்' அதேபோன்ற சட்டப் பாதுகாப்பை வழங்குவதே இந்த மசோதாவின் நோக்கமாக கூறப்படுகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 'வந்தே மாதரம்' பாடலை வேண்டுமென்றே அவமதிப்பது அல்லது அதன் பாடலைத் தடுக்க முயல்வது குற்றமாகக் கருதப்பட்டு, அதற்கான தண்டனை சட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படும். இருப்பினும், தண்டனையின் தன்மை மற்றும் கால அளவு உள்ளிட்ட விவரங்கள், மசோதாவின் முழு உரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதிகாரப்பூர்வமாக தெளிவாகும்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P