Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 17 ஜூலை (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே இராவணபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி அருள் மற்றும் அவரது மனைவி பிருந்தா ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் வீட்டில் இருந்தபோது, அங்கு புகுந்த 4 பேர் கொண்ட முகமூடி கும்பலைச் சேர்ந்தோர் தம்பதியை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து அவர்களிடம் இருந்து ரூபாய் 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தம்பதியினர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்ததளி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதோடு, தப்பியோடிய மர்ம கும்பலைத் பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b