கள்ளச்சாராயம் காய்ச்சிய விவகாரத்தில் கைதானவர் சிறையில் அடைப்பு
ஈரோடு, 17 ஜூலை (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வனகிராமங்கள் உள்ளன. கர்நாடக வனத்தையொட்டியுள்ள வனக்கிராமங்களில் கர்நாடக மதுபானங்கள் எளிதாக கிடைக்கின்றன. வனக்காடுகளில் நடைபாதையாக செ
Sathyamangalam


ஈரோடு, 17 ஜூலை (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வனகிராமங்கள் உள்ளன. கர்நாடக வனத்தையொட்டியுள்ள வனக்கிராமங்களில் கர்நாடக மதுபானங்கள் எளிதாக கிடைக்கின்றன.

வனக்காடுகளில் நடைபாதையாக சென்று மது அருந்தி வருவதால் கடம்பூர் போலீசார் கர்நாடக மதுபானங்களை கடத்தியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கடம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு மதுபான கடத்தைல தடை செய்தனர்.

இதற்கிடையே, கடம்பூர் பேருந்து நிலையத்தையொட்டியுள்ள அரசு மதுப்பானக்கடை அண்மையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டம் காரணமாக மூடப்பட்டது.

இதனால் கடம்பூர் மதுப்பான கடையை வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

கடம்பூர் பகுதியில் மதுபானக்கடை இருக்கக்கூடாது என மகளிர் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனால் கடந்த 15 நாள்களாக கடம்பூர் மலைப்பகுதியில் மதுபானக்கடை செயல்படவில்லை.

மதுபிரியர்கள் சத்தியமங்கலம் மற்றும் கர்நாடகம் செல்ல வேண்டியுள்ளது. இதை பயனபடுத்தி சட்டவிரோதமாக சிலர் எரிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தனர்.

இப்பகுதியில் கர்நாடக மதுபானங்களும் சட்டவிரோதமாக விற்க தொடங்கியுள்ள நிலையில், கடம்பூர் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக எரி சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைக்கத் தகவலை அடுத்து கடம்பூர் காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் தனிப்படை போலீசார் குரும்பூர் மலைப்பகுதியில் சோதனையிட்டனர்.

அப்போது குரும்பூர் ஆண்டிச்சாமி என்பவர் மாட்டு கொட்டகையில் எரி சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. அவரை கைது விசாரணை மேற்கொண்டதில் மாட்டு கொட்டகைக்கு பின்புறம் பதுக்கி வைத்திருந்த 8 லிட்டர் எரி சாராயம் மற்றும் 25 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக ஆண்டிச்சாமி மீது கடம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபி குற்றால நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN