சபரிவர்மன் உயிரிழப்புக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் – எஸ்.ஜி. சூர்யா
நாகர்கோயில், 17 ஜூலை (ஹி.ச.) நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி. சூர்யா தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர்
Sg


Nn


நாகர்கோயில், 17 ஜூலை (ஹி.ச.)

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி. சூர்யா தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தி.மு.க ஆட்சியில் நடந்ததைப் போலவே, தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலும் லாக்-அப் மரணங்கள் தொடர்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ள அவர், ஒவ்வொரு லாக்-அப் மரணத்தின்போதும் காவல்துறை அதை மாரடைப்பு எனக் கூறி மூடிமறைக்க முயல்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி என்ற நிலையிலும் சபரிவர்மனுக்கு நேர்ந்த இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அவரது மரணத்திற்கு முழுமையான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் எஸ்.ஜி. சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டி, இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்று விளக்கம் அளிப்பாரா என்றும் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ