Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
குரூப் 1 பதவிகளை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(Tamil Nadu Public Service Commission) கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
அப்போது வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி,
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - குரூப் 1க்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
மேலும், முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜூன் 30 ஆம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திறந்தது.
இந்த மாதம் 29ஆம் தேதி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 1 முதன்மைத் தேர்வு, தற்போது செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிர்வாகக் காரணங்கள் மற்றும் பிற தேர்வு அட்டவணைகளை கருத்தில் கொண்டு இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது.
தேர்வர்கள் தங்களது தயாரிப்பு பணிகளை புதிய தேர்வு அட்டவணைக்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறும், தேர்வு தொடர்பான பிற விவரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் குறித்த அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல் தொடர்ந்து பார்த்து தெரிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b