ஆடி வெள்ளி தேடி குளி - குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தென்காசி, 17 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்
Courtallam Falls


தென்காசி, 17 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றால அருவிகளில் புனித நீராடி, இந்த தமிழ் மாதம் இனிதே பிறக்க வேண்டும் என்பதற்காக அருகாமையில் உள்ள குற்றாலநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, ஆடி வெள்ளி தேடிக் குளி என ஐதீகங்கள் கூறும் நிலையில், குற்றால அருவியில் புனித நீராடி, ஆடி மாத பிறப்பை ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இனிதே தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN