Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
சென்னை மதுரவாயல் பகுதியில் சாலையின் ஓரமாக லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 27 வயதான பிரவீன் குமார் என்பவர், எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியுள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சாலையில் எவ்வித முன்னெச்சரிக்கை விளக்குகளோ, தடுப்புகளோ இன்றி லாரியை நிறுத்தியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாபநாசத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ரமேஷ் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b