Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் இன்று காலை வழக்கம் போல் ரயில் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்று மறுபுறம் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக வந்த விரைவு ரயில் அவர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையங்களில் உள்ள மேம்பாலங்களைப் பயன்படுத்தாமல், ஆபத்தான முறையில் தண்டவாளங்களைக் கடப்பது சட்டப்படி குற்றமாகும்.
பொதுமக்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து குறுக்கு வழியில் தண்டவாளத்தைக் கடப்பதைத் தவிர்க்க வேண்டும் என ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
முதியவர் ஒருவர், வேகமாக வந்த ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b