Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 18 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறை எடுத்து வரும் தீவிர அமலாக்க நடவடிக்கைகளின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அன்னூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவரிடம் 1.6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் துறையூரை சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜெயசூர்யா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட 1.6 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b