கொடைரோடு அருகே கஞ்சா வியாபாரி கைது - 2 கிலோ கஞ்சா, நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
திண்டுக்கல், 18 ஜூலை (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் ஜெயக்குமார் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், விற்பனையையும் தடுப்பதற்காக, மாவட்ட அளவிலான போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்
Ammayanaickanur Police Station


திண்டுக்கல், 18 ஜூலை (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் ஜெயக்குமார் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், விற்பனையையும் தடுப்பதற்காக, மாவட்ட அளவிலான போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் சிறுமலை அடிவாரத்தில் கிழக்குத்தோட்டப் பகுதியில், செல்வராஜ் (48), என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாகவும், அவர் நடமாடும் விற்பனையகமாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கே வந்து விற்பனை செயவதாவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து நோட்டமிட்டு வந்த மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் செல்வத்தை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ 20,000-த்திற்கு கஞ்சா விலைக்கு வேண்டும் என கேட்டுள்ளனர்.

அதிக தொகை என்பதால் செல்வம் தனது தோட்ட குடியிருப்பு பகுதிக்கு அவர்களை வரச்சொல்லி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அவரை பின்தொடர்ந்த தனிப்படை சார்பு ஆய்வாளர் ராம்சேட், அம்மையநாயக்கனூர் சார்பு ஆய்வாளர் சவடமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் அவரது வீட்டை சுற்றி வளைத்து அவரது வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது,

அவரது வீட்டில் சுமார் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர், மேலும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும், அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த அனுமதியில்லாத நாட்டு துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றினர்,

இதனையடுத்து செல்வத்தை கைது செய்த போதைப்பொருள் ஒழிப்பு தனிப்படை மற்றும் அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரனை செய்து, அவரை நிலக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN