ஆற்காட்டில் பட்டப்பகலில் கார் கண்ணாடி உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை
ராணிப்பேட்டை, 18 ஜூலை (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திரா நகர் தெருவைச் சேர்ந்த குமரேசன் (41) தொழிலதிபராக உள்ளார். இவர் தனது காரில் வாலாஜா சார்பதிவாளர் (ரிஜிஸ்டர்) அலுவலகத்திற்கு சென்று பணிகளை முடித்துவிட்டு, பின்னர் ஆற்காடு கருவூலம் அ
Arcot Town Police Station


ராணிப்பேட்டை, 18 ஜூலை (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திரா நகர் தெருவைச் சேர்ந்த குமரேசன் (41) தொழிலதிபராக உள்ளார்.

இவர் தனது காரில் வாலாஜா சார்பதிவாளர் (ரிஜிஸ்டர்) அலுவலகத்திற்கு சென்று பணிகளை முடித்துவிட்டு, பின்னர் ஆற்காடு கருவூலம் அலுவலகம் அருகே காரை நிறுத்திவிட்டு சிறிது நேரம் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே வைத்திருந்த ரூ.6 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

திரும்பி வந்த குமரேசன், காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதுடன், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN