Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 18 ஜூலை (ஹி.ச.)
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பசுமை சூழ்ந்த மேகமலையில் உள்ள அருவி சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக உள்ளது.
இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்பட வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் மேகமலை அருவிப் பகுதியில் உள்ள சில இடங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் தூண்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.
இதனை சீரமைக்கும் பணியை வனத்துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மேகமலை அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை இரண்டாம் நாளாக இன்றும் தொடர்வதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சேதமடைந்த பாதுகாப்பு தடுப்பு மற்றும் தூண்களை சீரமைக்கும் பணி முழுமையாக முடிவடையும் வரை இந்த தடை தொடரும் எனவும், பணிகள் முடிந்த பின்னர் சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையின் தடையால் அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b