சோழிங்கநல்லூரில் விதிமீறி கட்டப்பட்ட 2 கட்டடங்களுக்கு மாநகராட்சி சீல்
சென்னை, 18 ஜூலை (ஹி.ச.) சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் மண்டலத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி, பூட்டி சீல் வைத்தனர். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதிமீறி கட்டப்படும் கட்டட
Corporation


சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் மண்டலத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி, பூட்டி சீல் வைத்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இன்று (18.07.2026) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு எண் 197-இல் உள்ள பனையூர், கடற்கரை 7-வது அவென்யூ, மனை எண் 244-ல் அமைந்துள்ள கட்டடம் மற்றும் கடற்கரை 5-வது அவென்யூ, மனை எண் 174A மற்றும் 174B-ல் அமைந்துள்ள மற்றொரு கட்டடம் ஆகியவை கட்டிட விதிகளை மீறி கட்டப்பட்டதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இரண்டு கட்டடங்களிலும் நோட்டீஸ் ஒட்டி, அவற்றை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ