Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 18 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சனிக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது காலை முதலே அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, குற்றால பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே தற்போது தண்ணீர் ஆனது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தற்போது குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக, இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது காலை முதலே அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், மேலும் இன்றைய தினம் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN