Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 18 ஜூலை (ஹி.ச)
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி கரையோரங்களில் இருந்து இரவு நேரங்களில் மணல் திருடப்படுவதாக வருவாய்த்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் பரமத்தி வேலூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் மினி டெம்போ ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் சுமார் 40 மூட்டைகளில் ஆற்று மணல் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், அந்த மணல் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக அள்ளப்பட்டது என்பதும், இந்த செயலில் பரமத்தி வேலூரைச் சேர்ந்த திமுக நிர்வாகி தினேஷ் என்பவர் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி டெம்போ வாகனம், கடத்தலுக்கு துணையாக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 40 மூட்டை ஆற்று மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த மணல் திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b