திமுக நிர்வாகி மீது தவெகவினர் கொலைவெறி தாக்குதல் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல்!!
நாகப்பட்டினம், 18 ஜூலை (ஹி.ச.) நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பகுதியில் திமுக கீழையூர் ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது பட்டப்பகலில் நடைபெற்றதாகக் கூறப்படும் கொலைவெறி தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்
தாக்குதல்


நாகப்பட்டினம், 18 ஜூலை (ஹி.ச.)

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பகுதியில் திமுக கீழையூர் ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது பட்டப்பகலில் நடைபெற்றதாகக் கூறப்படும் கொலைவெறி தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தகவலின்படி, மேல பிடாகை கடைத் தெருவில் ரவிச்சந்திரன் மீது இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் தவெக கீழையூர் ஒன்றிய துணைச் செயலாளர் சித்ராவின் கணவரும், சிந்தாமணி கிராம நியாய விலைக் கடை விற்பனையாளருமான வெண்மணி மற்றும் அவரது சகோதரர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் வெண்மணி, சிவராமன், ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கொலைவெறி தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையிலும், சம்பந்தப்பட்டவர்களை இதுவரை கைது செய்யாமல் கீழையூர் போலீசார் காலதாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam