Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 18 ஜூலை (ஹி.ச.)
கோவையில் பேரூர் தமிழ்க் கல்லூரி மற்றும் பல்சமயம் நல்லுறவு இயக்கம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடகம் நிகழ்த்தப்பட்டது.
பல்சமயம் நல்லுறவு இயக்கம் சார்பில் போதை பொருளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடகம் வடிவிலும் ,பேரணி மூலமாகவும் பல்வேறு நிகழ்சிகளை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று முதல் நிகழ்ச்சியாக கோவை பேரூர் தமிழ் கல்லூரியோடு இணைந்து போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடகம் நிகழ்த்தப்பட்டது.
பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் பல்சமயம் நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரபீக் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்சமயம் சார்பில் எடுக்கப்பட்ட போதை பொருள் எதிர்ப்பு குறித்து எடுக்கப்பட்ட பாடல் வெளியிடப்பட்டு மாணவர்ளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய பல்சமயம் நல்லுறவு இயக்கத்திம் தலைவர் முகமது ரபீக்,
இது போன்ற போதை பொருள் எதிர்ப்பு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ,எதிர்கால தலைமுறையினரை நல்வழிப்படுத்த பல்சமயம் இயக்கம் பல்வேறு முயற்சிகளை எடுக்கும் எனத்தெரிவித்தார்
Hindusthan Samachar / Durai.J