வயல்வெளி கோரைப்புல் தீயில் சிக்கி முதியவர் உடல் கருகி பலி
ராணிப்பேட்டை, 18 ஜூலை (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள சித்தாதூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். சித்தாதூரில் தனக்கு சொந்தமான விவசாய நிலம் இருப்பதால் அந்த நிலத்தை பார்வைய
Elderly man burnt to death


ராணிப்பேட்டை, 18 ஜூலை (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள சித்தாதூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார்.

சித்தாதூரில் தனக்கு சொந்தமான விவசாய நிலம் இருப்பதால் அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது வயலுக்கு அருகே சென்றபோது, அங்கு வளர்ந்திருந்த காய்ந்த கோரைப் புற்களில் திடீரென தீப்பிடித்துள்ளது. கோடை வெயில் காரணமாக காய்ந்து கிடந்த புற்கள் என்பதால் தீ மளமளவென பரவியுள்ளது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத தேவேந்திரன் தீயில் சிக்கிக் கொண்டார். தீயின் பிடியில் இருந்து வெளியே வர முடியாமல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வாலாஜா போலீசார், தேவேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடை மற்றும் வறண்ட காலங்களில் வயல்வெளிகளில் உள்ள கோரைப்புற்கள் எளிதில் தீப்பற்றக் கூடியவை. காற்றில் பரவும் தீயின் வேகத்தை முதியவர்களால் கணிக்க முடியாமல் போவதே இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணம் ஆகும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் வயதானவர்கள் யாரும் தனி ஆளாக வயல்வெளிகளில் காய்ந்த புற்களையோ அல்லது கோரைப்புற்களையோ எரிக்கக் கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b