Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 ஜூலை (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழக (தவெக) வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசெளந்தரி, கட்சியில் இருந்து தன்னை நீக்கியதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும், அதற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பாதவது:-...
முதல்வர் விஜய் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறார். அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் நான் நீதிமன்றத்தை நாடினேன்.
தனிப்பட்ட நோக்கத்திற்காக அல்ல; சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கையால்தான் இந்த நடவடிக்கையை எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும், என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு சட்டவிரோதமானது.
மாநில நிர்வாகிகளை அல்லது அடிப்படை உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கு இல்லை. எனவே, அந்த அறிவிப்புக்கு எந்த சட்டப்பூர்வமான செல்லுபடியாகும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam