தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்- இன்றைய நிலவரம் என்ன?
சென்னை, 18 ஜூலை (ஹி.ச.) ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கம் விலை காலை மாலை என 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தொடர் சரிவை கண்டது. அந்த வகைய
தங்கம்


சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)

ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கம் விலை காலை மாலை என 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தொடர் சரிவை கண்டது.

அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,100க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.104,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P