Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 18 ஜூலை (ஹி.ச.)
கேரள மாநிலம் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை நீலகிரி கருங்குரங்கு இனத்தில் புதிய குட்டி பிறந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை தாயகமாக கொண்ட நீலகிரி கருங்குரங்குகள், கூச்ச சுபாவம் கொண்டவை என்பதால் எளிதில் இனப்பெருக்கம் செய்யாது.
இந்த நிலையில், திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ராஜீவ் (18) மற்றும் ரஞ்சினி (15) ஆகிய கருங்குரங்கு ஜோடிக்கு குட்டி பிறந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு இந்த ஜோடிக்கு ‘சோனா’ என்ற பெண் குட்டி பிறந்தது.
அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது புதிய குட்டி பிறந்துள்ளது. இதன் மூலம் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் உள்ள நீலகிரி கருங்குரங்குகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
பிறந்துள்ள குட்டியும், அதன் தாயும் நலமாக இருப்பதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவக் குழுவினர் அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அரிய வகை நீலகிரி கருங்குரங்கு இனத்தில் ஏற்பட்டுள்ள இந்த புதிய வரவு, வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA