சென்னை மதுரவாயலில் சாலையோரம் அமர்ந்திருந்த 65 வயது நபர் மீது லாரி ஏறி இறங்கி உயிரிழப்பு
சென்னை, 18 ஜூலை (ஹி.ச.) சென்னை மதுரவாயில் பைபாஸ் சர்வீஸ் சாலையோரம் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத 65 வயது நபர் மீது, பின்னோக்கி வந்த லாரி ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த காண்டீபன் என்பவர் இரவு 11 மணியளவில்
Lorr


சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)

சென்னை மதுரவாயில் பைபாஸ் சர்வீஸ் சாலையோரம் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத 65 வயது நபர் மீது, பின்னோக்கி வந்த லாரி ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த காண்டீபன் என்பவர் இரவு 11 மணியளவில் மதுரவாயல்–வானகரம் சர்வீஸ் சாலையில் லாரியை நிறுத்தியுள்ளார்.

பின்னர் லாரியை பின்னோக்கி இயக்கியபோது, சாலையில் அமர்ந்திருந்த நபரை கவனிக்காமல் லாரியை இயக்கியதாக கூறப்படுகிறது.

இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், அந்த நபரின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் காண்டீபனை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ