Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூலை (ஹி.ச)
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலின் யானை அபயாம்பிகைக்கு ஓய்வு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கோவாவைச் சேர்ந்த அலோக் அஸ்வனி குப்தா என்பவர், தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி 60 வயதை எட்டிய அபயாம்பிகை யானைக்கு ஓய்வு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அபயாம்பிகை யானைக்கு தற்போது 57 வயதுதான் ஆகிறது. யானை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வனத்துறையின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, அபயாம்பிகை யானைக்கு ஓய்வு வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ