முதல்வர் விஜய் ஆய்வுக்கு அடுத்த நாளே நடவடிக்கை- எம்.சி. ராஜா விடுதி மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம்
சென்னை, 18 ஜூலை (ஹி.ச.) சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று மேற்கொண்ட திடீர் ஆய்வைத் தொடர்ந்து, மாணவர்கள் முன்வைத்த குறைகள் மீது சமூக நீதி துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு த
முதலமைச்சர்


சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)

சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று மேற்கொண்ட திடீர் ஆய்வைத் தொடர்ந்து, மாணவர்கள் முன்வைத்த குறைகள் மீது சமூக நீதி துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கும் வகையில் விடுதியின் உணவுப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்த இட்லி மற்றும் சப்பாத்தி மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த வாலிபால் மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

அத்துடன், மாணவர்களுக்கு தரமான உணவு தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜயின் ஆய்வுக்குப் பிறகு, மாணவர்களின் கோரிக்கைகள் மீது அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நீதி துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P