கிளீன் கவர்மெண்ட் என்பது தான் முதல்வர் விஜய்யின் முதல் நோக்கம் - அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை, 18 ஜூலை (ஹி.ச.) திருப்பரங்குன்றம் சோளங்குரணி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த போத்தி ராஜன் வள்ளியம்மன் கோவில் திருவிழாவில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று கிராம மக்களுடன் சேர்ந்து பங்கேற்றார். தொடர்ந்து
Minister Nirmal Kumar


மதுரை, 18 ஜூலை (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் சோளங்குரணி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த போத்தி ராஜன் வள்ளியம்மன் கோவில் திருவிழாவில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று கிராம மக்களுடன் சேர்ந்து பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறுகையில்,

21 ஆண்டுகளுக்குப் பிறகு 35 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று சந்தோஷமாக அவர்கள் கோவில் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள் இது 800 வருட பாரம்பரியம். கண்டிப்பாக திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள் அதற்காக வந்து மக்களுடன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டேன்.

மக்கள் அடிப்படை உரிமை அவர்களின் பாரம்பரியம் நடைமுறைப்படுத்த விரும்புகிறார்கள் அதிலும் ஆங்காங்கே தடைகள் ஏற்படுகிறது. 800 வருட நடைமுறையை 21 வருடமாக செய்ய முடியாமல் சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்பது வியப்புடையது.

மதுரை போன்ற மாநகரக்குள்ளேயே 21 வருடங்களாக அவர்களுக்கு உரிமை இருந்தும் போக முடியவில்லை அந்த சூழ்நிலையை கூட ஏற்படுத்தி தர முடியாத நிலை இங்கே உள்ளது. இன்னும் கிராமங்களில் என்ன சூழ்நிலை இருக்கும் என்று யூகிக்க முடியாது. பொதுமக்களுக்கு அடிப்படை உரிமைகள் என்ன தேவைகள் இருக்கோ அது அனைத்தும் அவங்களுடைய உரிமை மீண்டும் பொதுமக்களுக்கு சொல்கிறோம் இது மக்களுடைய அரசு அவர்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் அண்ணன் விஜயின் அரசு அவர்களுக்கு தேவையானதை செய்வதுதான் இந்த அரசு.

நிறுவனங்களுக்கு பின்னாடி செல்வதும் அவர்களுக்கு வேண்டியதை செய்யும் அரசியல் தலைவர்கள் தான் இருந்திருக்கிறார்கள்.25 ஆண்டுகளாக மக்கள் போராடி ஒரு குவாரியை மூட முடியவில்லை நாங்கள் அதை மூடி உள்ளோம்.

அதேபோல் நிறைய இடத்தில் மீட்டு கொடுத்துள்ளோம் மக்களுடைய வாழ்க்கை தான் முக்கியம் அவர்களுக்கு கேடுதல் செய்தோ எந்த விஷயத்தையும் செய்ய முயற்சி செய்யப் போவதில்லை. இதில் கலந்து கொண்டது மிகுந்த சந்தோசம் அவர்களின் சந்தோஷத்தை பார்க்கும் போதும் ரொம்ப சந்தோஷம் முதல்வர் விஜய்க்கு வாக்களித்ததற்கு இது அவர்களின் அரசு என்று உணரும் தருணமாக பார்க்கிறேன்.

வழக்கமாக பட்ஜெட்டுக்கு முந்தைய அமைச்சரவை கூட்டம் தான் நடைபெற்றது. வரவு செலவு கணக்குகள் தான் தாக்கல் செய்யப்பட்டது.

முதல்வர் நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னாடியே எங்களுக்கு சொன்னது எந்த தவறும் செய்யக்கூடாது மக்களுக்கான சேவை மட்டுமே செய்ய வேண்டும். அவர்கள் தான் எஜமானர்கள் லஞ்ச, லாவண்யம், தவறு, மக்களுக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது.

ஒவ்வொரு கூட்டத்திலும் முதல்வர் இதை சொல்லி இருக்கிறார். கிளீன் கவர்மெண்ட் என்பது தான் முதல்வரின் முதலாவது நோக்கம் அதை நோக்கி தான் பயணிக்கிறோம் அமைச்சரவை கூட்டத்திலும் முதல்வர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் சொன்னார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை குறித்தது எதுவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பட்ஜெட் முடிவுக்குப் பின் தெரியும். தொடர்ந்து கோவிலில் வைத்து அரசியல் வேண்டாம் இன்னொரு நாள் தெளிவாக பேசுவோம் என்று கூறினார்.

மேலும் விமானம் வானில் வட்டமடித்தது குறித்த செய்தியாளர்கள் கேட்டதற்கு விமானம் தரையிறங்குவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை எனவே 15 நிமிடம் பறந்தது அதற்கு மேல் விவரம் தெரியவில்லை என்றார்.

Hindusthan Samachar / vidya.b