6 மாதத்தில் ஆட்சி கவிழும் என்ற அனிதா ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலடி – அறியாமையில் பேசுகிறார் ,அமைச்சர் மரிய வில்சன்
தூத்துக்குடி, 18 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு
மரிய வில்சன்


தூத்துக்குடி, 18 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், கடந்த 15 நாட்களாக முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்னும் ஆறு மாதங்களில் தற்போதைய அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் அறியாமையில் பேசுகிறார். அவருக்கு உண்மை நிலை (ரியாலிட்டி) இன்னும் தெரியவில்லை. மக்கள் அளித்த தீர்ப்புக்கு மரியாதை கொடுக்க அவருக்கும், அவரது தலைமைக்கும் தெரியவில்லை என்று அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்தார்.

மேலும், தமிழக அரசு ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறதா என்ற கேள்விக்கு, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மக்கள் இந்த அரசை வரவேற்கும்போது, நீங்களும் அதை வரவேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam