Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 18 ஜூலை (ஹி.ச.)
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரத்திடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர், மேலதிக விசாரணைக்காக அவரை திண்டுக்கலுக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் பகுதியைச் சேர்ந்த குமரகுருபரன் உள்ளிட்ட இருவரிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி கோவிலுக்குச் சொந்தமான மதிப்புமிக்க நிலம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P