Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 18 ஜூலை (ஹி.ச.)
தென்காசி நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலை சார்ந்த அருள்மிகு சங்கரநாராயணசாமி கோமதி அம்மாள் திருக்கோவிலில் ஆடித்தபசு பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த கொடியேற்று நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்த நிலையில், தொடர்ந்து இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி தபசு காட்சி வருகின்ற 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் நடைபெறும் எனவும், தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்வு வருகின்ற 29-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 13 நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி தபசு காட்சி அன்று வெளிமாவட்ட போலீசாரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த போலீசார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN