உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி, 18 ஜூலை (ஹி.ச.) டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி காவல்துறையினரால் இன்று போராட்ட இடத்திலிருந்து அகற்றப்பட்டு, சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப
Sonam


புதுடெல்லி, 18 ஜூலை (ஹி.ச.)

டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி காவல்துறையினரால் இன்று போராட்ட இடத்திலிருந்து அகற்றப்பட்டு, சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில்,

டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, சப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனம் வாங்சுக் தேவையான மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததாலும், உடலில் நீர்ச்சத்து குறைந்ததாலும் அவர் மிகவும் பலவீனமடைந்துள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், உடலின் இயல்பான செயல்பாடுகளை மீட்டெடுக்க தொடர்ந்து கண்காணிப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அவசியமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோனம் வாங்சுக் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரது முக்கிய உடல்நலக் குறியீடுகள் தற்போது நிலையாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P