தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம் - முதலமைச்சர் விஜய்
சென்னை, 18 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் தளத்தில், தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாட
CM Joseph Vijay


சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் தளத்தில்,

தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!

தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN