தமிழ்நாடு நாள் - அண்ணாவை நினைவு கூர்ந்து மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழ்நாடு, 18 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 1956-ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட பின்னரும், இந்த மாநிலம் Madras State
ஸ்டாலின்


தமிழ்நாடு, 18 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 1956-ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட பின்னரும், இந்த மாநிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற பல்வேறு முயற்சிகள், தீர்மானங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் அது நிறைவேறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா, சட்டப்பேரவையில் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என அறிவித்ததே வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்ணா தமிழ்நாடு என்ற பெயரை அவையில் முழங்கியபோது, உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க என்று முழக்கமிட்டு வரவேற்றதாகவும், தமிழர்களின் நீண்டகால உணர்வும் ஏக்கமும் நிறைவேறிய நாளே தமிழ்நாடு நாள் என்றும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P