Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 ஜூலை (ஹி.ச.)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் 23ஆம் தேதி வரை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் எனவும், வடக்கு கடலோர தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 23ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. வெயிலைப் பொறுத்தவரையில், உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வரும் 21ஆம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும், கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டியே பதிவாகும் எனக் கூறியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P