Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 18 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடியில் நிதி அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருகிறார்.
உண்மை நிலை அவருக்கு இன்னும் தெரியவில்லை. பாவம் அதனால் தான் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.
அறியாமையில் தான் பேசிக் கொண்டிருக்கிறார்.
உண்மை நிலைக்கு அவர் இன்னும் வரவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது மாதிரி தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியவில்லை, திமுக தலைமைக்கும் தெரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் தலைவணங்க வேண்டும்.
தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும். தமிழக முதல்வரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு 100% மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள் என நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்து உள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN