Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 18 ஜூலை (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிந்தடிக் ஹாக்கி மைதானத்தை, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், புதிய சிந்தடிக் ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்து, ஹாக்கி போட்டிகளையும் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்களை சந்தித்த அமைச்சர், அவர்களிடம் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ரூ.10 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன சிந்தடிக் ஹாக்கி மைதானம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்கு புதிய ஊக்கமாக அமையும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam