Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 ஜூலை (ஹி.ச.)
அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசெளந்தரி தவெக-வில் இருந்து நீக்கம்
அமைச்சர் என். ஆனந்த் மீது அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஞானசெளந்தரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் ஒழுக்க விதிகளுக்கு முரணாக செயல்பட்டதுடன், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி, ஞானசெளந்தரியை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியினர் யாரும் ஞானசெளந்தரியுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், அவரது செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்றும் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
ஞானசெளந்தரி அமைச்சர் ஆனந்த் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam