Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ , 18 ஜூலை (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 12 வயது சிறுவனை முதலை கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹ்ராயிச் மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் (வயது 12), தனது உறவினருடன் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு வேலை முடித்த பின்னர், அருகில் உள்ள ஆற்றில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் பதுங்கியிருந்த முதலை திடீரென சிறுவன் சுனிலை கடித்து இழுத்துச் சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், பல மணி நேரம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிறுவனின் உடல் பாகங்களை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA