Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)
அக்குவா யோகா எனும் நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்யும் முயற்சியில் 7 மணிநேரம் யோகா செய்து 60 வயதில் ரமா லட்ஷ்மி ராஜா உலக சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் கடந்த 25 ஆண்டுகள் மேல் யோகா படிக்க ஆரம்பிச்சேன். ஆரோக்கியத்துக்காக யோகா படிச்சேன்.
உங்கள் எல்லாருக்கு பிடித்த மாதிரி தண்ணீல வளையாடுவது எனக்கும் பிடிக்கும்.
ஆகையால், மூச்சு பயிற்சியை தொடர்ந்து பண்ணிட்டு வரும்போது தண்ணீல மெதந்து பார்க்கலாம் சொல்லி முயற்சி பண்ணேன்.
கொஞ்சம் மூச்சை கட்டுப்படுத்தி உடம்பு தளர்வு செய்து நம்ம முயற்சி பண்ணும்போது என்னால தண்ணீல மெதக்க முடிந்தது.
அதனால், தண்ணீல மெதக்கிறது ஒரு பக்கம். யோக பயிற்சி ஒரு பக்கம். இந்த இரண்டையும் நான் தொடர்ந்து பயிற்சி பண்ணிட்டு வந்தேன்.
வயசாகும்போது ரொம்ப கடினமான யோகா பண்ணும்போது எலும்புகளில் கொஞ்சம் வலி வந்தது.
இதனை தவிர்க்க ஏன் நம்ம இதெல்லாம் தண்ணீர்ல முயற்சி பண்ணக்கூடாதுன்னு நினைத்து அந்த மாதிரி ஆரம்பிச்சது தான் இந்த யோகா பயிற்சி.
நான் எந்த வித குறிப்பிட்ட கட்சியும் கிடையாது. ஆனா பிரதமர் மோடி அவர்கள் யோகா தினத்தை ஆரம்பித்தபோது கொஞ்சம் உந்துதலாக இருந்தது.
இது மாதிரி சமிபத்தில் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தில் நான் 21 யோகா போச்சிஸ் இன் 21 மினிஸ்ட் என்று சொல்லிப் பண்ணனேன்.
டியார் ஃபிட் மூவ் மற்றும் ஆயுஷ் நிறுவனத்துடன் சேர்ந்து செய்தேன். சிப்பேசியல் கேட்டகரில் இண்டர்நேஷ்ணல் யோகா அமைப்பு கோல்டு மெடல் கொடுத்தாங்க.
தண்ணீரில் விருக்ஷ பத்மாசனா எனும் யோகாவில் ஒரு காலை தூக்கி, இன்னொரு காலை தொடை மேல வைச்சுட்டு, பண்ட விரிக்ஷ பத்மாசனால, முயற்சி செய்தேன்.
இதற்கு முன் இந்த யோகாவில் 1 மணிநேரம் 30 நிமிடம் உலக சாதனை உள்ளது.
ஆனால் நான் 2 மணிநேரம் 50 நிமிடம் செய்தேன், இந்தர்நேஷியல் புக் ஆப் ஆல் ரெக்காட்ஸும், இந்தியா புக் ஆப் ரெக்காட்ஸும், ஆள் ரெக்காட்ஸ் ஆப் இந்தியா ரெக்காட்ஸ் ஆகியவை அங்கீகாரம் கொடுத்தார்கள்.
இதையே 7 மணிநேரம் தொடர்ந்து நீரில் மிதந்து சாதனை படைத்துள்ளேன்.
அதற்கும் இந்தர்நேஷியல் புக் ஆப் ஆல் ரெக்காட்ஸும், இந்தியா புக் ஆப் ரெக்காட்ஸும், ஆள் ரெக்காட்ஸ் ஆப் இந்தியா ரெக்காட்ஸ் ஆகியவை அங்கீகாரம் கொடுத்தார்கள்.
7 மணி நேரம் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் யோகா செய்ய தியான பயிற்சி எனக்கு கை கொடுத்தது.
இது போன்ற யோகாவை எல்லா நீர் நிலைகளிலும் செய்து விட முடியாது.
எந்தவித இடையூறும் இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் நீச்சல் குளம் தான் சரியான தேர்வாக இருக்கும்.
பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பலவிதமான நெருக்கடிக்கு ஆள் ஆகிறார்கள்.
அவர்கள் மன நலத்துடன் கூடிய ஆரோக்கியம் பெற யோகா முக்கிய பங்காற்றும்.
இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த உலக சாதனை படைக்க விரும்பினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b